LATEST NEWS
மீண்டும் சிக்கிய செந்தில் பாலாஜி… 4,000 மெகாவாட் சோலார் திட்டம்… திமுக ஆட்சியில் மாபெரும் முறைகேடு…? பின்னணியில் நடந்தது என்ன..? இந்திய சோலார் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..!!!
தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 4,000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்திய சோலார் சங்கம் வெளியிட்டுள்ள பகிரங்க தகவல்கள் தற்போது மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திட்டங்களின் செயல்படுத்தல், ஒப்பந்த நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் விதிமீறல்கள் இருந்ததாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட சூரிய ஒளி மின் திட்டங்களில் கடுமையான விதிமீறல்கள் மற்றும் நிர்வாக முறைகேடுகள் நடைபெற்றதாக இந்திய சோலார் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தில் 1,750 மெகாவாட் சோலார் மின் திறனை கையாளும் வகையில் அமைக்கப்படவிருந்த முக்கிய துணைமின் நிலையம் தொடர்பான பணிகள் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் ஒரு சில கோப்புகள் அல்லது குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுடன் மட்டும் தொடர்புடையதாக பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மெகாவாட் அளவிலான பசுமை எரிசக்தி உற்பத்தித் திறன், பல கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவை இதனால் பாதிக்கப்படக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் எதிர்கால சூரிய மின் திட்டங்களின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
மக்களுக்கு பசுமை எரிசக்தி மற்றும் வளர்ச்சி தொடர்பான பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் முறைகேடுகள் நடைபெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா, திட்டங்களில் விதிமீறல்கள் நடைபெற்றனவா, அதனால் அரசுக்கு அல்லது முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
