LATEST NEWS
உயிர் பயத்தில் டிரம்ப்.. விமானத்தில் ஏறுவதுபோல் நாடகமாடி.. உணவு டிரக்கில் ஏறி ரகசியமாக தப்பித்த பரபரப்பு பின்னணி..!!
ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து ரகசியமாகத் தப்பிய அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை 7-ம் தேதி துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், அங்கிருந்து புறப்படும்போது ஊடகங்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இந்த ரகசியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கத்தார் பரிசாக வழங்கிய புதிய ஏர் போர்ஸ் ஒன் போயிங் 747-8 விமானத்தில் துருக்கி வந்திறங்கிய அவர், திரும்பும்போது தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது போல நாடகமாடியுள்ளார்.
‘தி வாஷிங்டன் போஸ்ட்’ தகவலின்படி, பழைய ஏர் போர்ஸ் ஒன்னில் ஏறிய டிரம்ப், உணவு டிரக் மூலம் ரகசியமாக வெளியேற்றப்பட்டு, சிறிய C-32A விமானத்தில் இங்கிலாந்தில் உள்ள RAF Mildenhall தளத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அச்சமயம், பழைய விமானத்தில் இருந்தவர்களிடம் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரான் படுகொலை அச்சுறுத்தல் காரணமாகவே இந்த அதிரடி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை, 2000-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்குச் சென்ற பில் கிளிண்டனின் பயணத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.
