“கேலிப் பேசறீங்களா..? எனக்கு ENGLISH தான் வரும்” என சொன்ன நிதியமைச்சர்… அமைச்சரே ரெடியா..? சவால் விடும் எதிர்க்கட்சியினர்… பரபரக்கும் அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கேலிப் பேசறீங்களா..? எனக்கு ENGLISH தான் வரும்” என சொன்ன நிதியமைச்சர்… அமைச்சரே ரெடியா..? சவால் விடும் எதிர்க்கட்சியினர்… பரபரக்கும் அரசியல்..!!

Published

on

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது அவரது தமிழ் உச்சரிப்பு மற்றும் தமிழ் இலக்கணப் பிழைகள் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.எம். ராஜேந்திரன் விமர்சனம் செய்து, எதிர்காலத்தில் பிழையின்றி பேசுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் ஆவேசமடைந்த அமைச்சர் மரிய வில்சன், “இது என்னுடைய ஸ்டைல், உங்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது” என்றும், தனது மதம் தனக்கு அன்பின் மொழியைக் கற்றுக்கொடுத்துள்ளது என்றும் கூறி தனது மைக்கை தள்ளிவிட்டு அமர்ந்தார். மேலும் கேலிப் பேசறீங்களா.. எனக்கு ENGLISH தான் வரும் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் விவாதங்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தச் சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களது அமைச்சருக்கு ஆதரவாகவே சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில், தமிழ் மொழியின் ஆளுமையுடன் ஒரு மதத்தை ஒப்பிட்டுப் பேசியதற்காகவும், தமிழில் பிழையாகப் பேசியதற்காகவும் அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக திமுக மற்றும் பாஜகவினர் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர். சட்டமன்றத்தில் மத அடையாளத்தை உயர்த்திப் பிடித்து, தமிழ் மொழியைத் தாழ்த்திப் பேசியதாகக் கூறி, அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தின் நிதி மேலாண்மை பற்றி அருகில் நிதிச் செயலரை வைத்துக்கொள்ளாமல் அமைச்சர் ஆங்கிலத்தில் பேச ரெடியா என எதிர்க்கட்சியினர் சவால் விடுகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in