என்னது… ஒரு கிலோ தெரு மண் ரூ.100-ஆ..? ஹைதராபாத் வீதிகளில் நடக்கும் நம்பமுடியாத கூத்து..! பின்னணியில் உள்ள ஷாக்கிங் உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது… ஒரு கிலோ தெரு மண் ரூ.100-ஆ..? ஹைதராபாத் வீதிகளில் நடக்கும் நம்பமுடியாத கூத்து..! பின்னணியில் உள்ள ஷாக்கிங் உண்மை..!!

Published

on

ஹைதராபாத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மண்ணை மக்கள் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஷ்ணு புரோஹித் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், பெண்கள் சிலர் சாலையில் உள்ள குப்பையையும் மண்ணையும் கூட்டி எடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில் “இது வெறும் சேறு அல்ல, தங்கம்” என்று குறிப்பிடப்பட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த மண் இவ்வளவு விலைக்கு விற்பனையாவதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது. அந்தப் பகுதி முழுவதும் புகழ்பெற்ற நகைக் கடைகளும், நகை செய்யும் பட்டறைகளும் நிறைந்த ‘கோல்ட் மார்க்கெட்’ ஆகும். நகைகள் செய்யும்போதும், அவற்றை மெருகேற்றும்போதும் சிதறும் மிகச்சிறிய தங்கத் துகள்கள் மற்றும் தூசிகள், வீதியின் மண் மற்றும் கழிவுகளுடன் கலந்துவிடுகின்றன. இதனாலேயே அங்குள்ள சாதாரண மண்ணிலும் தங்கத் துகள்கள் நிறைந்திருக்கின்றன.

Advertisement

https://www.instagram.com/reel/DbsDu_upTds/?utm_source=ig_web_button_share_sheet

இதன் காரணமாகவே அங்குள்ள தொழிலாளர்களும் பெண்களும் தினமும் வீதியில் உள்ள கழிவுகளையும் மண்ணையும் சேகரித்து கிலோ ரூ.100 வீதம் விற்பனை செய்கின்றனர். இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்ட துல்லியமான பகுதி எதுவென்று வெளிப்படையாகக் கூறப்படாவிட்டாலும், ஹைதராபாத்தின் புகழ்பெற்ற நகை சந்தைப் பகுதிகளான சார்மினார், பிகம் பஜார், பத்தர் கட்டி மற்றும் லாட் பஜார் ஆகிய இடங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த செய்தி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in