LATEST NEWS
அடப்பாவி..! பிரியப் போவதாகக் கூறிய காதலி… கழுத்தை நெரித்துக் கொன்று பிளான போட்டுத் தப்பிய இந்திய இளைஞர்..! சிக்கியது எப்படி…?!
அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், தன் காதலியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள டியூக்சன் நகரில் அமைந்த குடியிருப்பு ஒன்றில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் அவசர உதவிக்குழுவினர் அங்கு சென்று பார்த்தபோது, ஜுலிஸ்ஸா ரூபி சலஸார் என்ற இளம்பெண் உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது. பொலிஸார் நடத்திய ஆய்வில் அப்பெண் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது உறுதியானது.
இக்கொலை வழக்கு விசாரணையில், ஜுலிஸ்ஸாவின் காதலரான வருண் பச்சிகரி என்ற இந்திய இளைஞர் மீது சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பொலிஸார் அவரைத் தேடத் தொடங்கினர். ஆனால், அதற்குள்ளாகவே வருண் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக விமானம் ஏறிவிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து டியூக்சன் நகர பொலிஸார், உள்ளூர் எஃப்.பி.ஐ அதிகாரிகள் மற்றும் பெர்லினில் உள்ள எஃப்.பி.ஐ அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், ஜேர்மனியை வந்தடைந்த வருணை அங்குள்ள அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் விரைவில் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
சாட்சியங்களின்படி, வருண் தனது காதலி ஜுலிஸ்ஸாவைத் தொடர்ந்து தாக்கி மோசமாக நடத்தி வந்ததாகத் தெரிகிறது. இதனால் வருணை விட்டுப் பிரிய ஜுலிஸ்ஸா முடிவெடுத்த நிலையில், ஆத்திரமடைந்த வருண் அவரைக் கழுத்து நெரித்துக் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்ப முயன்றதாகக் கருதப்படுகிறது.
