LATEST NEWS
“தமிழக மக்கள் எல்லைக்குள் வராதீங்க..!” வாட்டாள் நாகராஜ் பகிரங்க எச்சரிக்கை… மீண்டும் வெடித்த அரசியல் சர்ச்சை..!!
மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதைக் கண்டித்து, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தீவிரப் போராட்டங்களில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை முன்னிட்டு, தமிழக மக்கள் மற்றும் வாகனங்கள் கர்நாடகாவிற்குள் நுழைய வேண்டாம் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மேகதாது திட்டத்திற்குத் தடை போடும் தமிழக அரசைக் கண்டித்தும், காவிரி நீரை கர்நாடகாவே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வரும் 13-ஆம் தேதி கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அசாதாரணச் சூழல் காரணமாக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் நேரத்தில் தமிழகப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அத்திப்பள்ளி எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கர்நாடகாவிற்குள் செல்ல அனுமதிக்கப்படாது என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இரு மாநில எல்லைப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, காவிரி நீர்ப்பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு – கர்நாடகா இடையே மீண்டும் ஒரு பரபரப்பான அரசியல் மற்றும் சமூகச் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
