LATEST NEWS
“அவனை வழியில இருந்து தூக்கணும்…” 3வது குழந்தை பிறந்த பிறகும் நான் விதவைன்னு பொய் சொன்ன ஆசிரியை.. போட்டுக்கொடுத்த சொந்த கணவர்… அடுத்தடுத்து வெளிவரும் பகீர்..!!
ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தகவலை மறைத்து, விதவை இடஒதுக்கீட்டின் கீழ் போலியான ஆவணங்கள் மூலம் அரசு ஆசிரியர் வேலை பெற்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் ஜோட்வாரா காவல் நிலையத்தில் அப்பெண்ணின் கணவர் அளித்துள்ள புகாரின் பேரில், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2026 செப்டம்பர் 19 அன்று இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து, காவல்துறை ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
புகாரின்படி, மனுதாரர் மற்றும் அந்தப் பெண்ணிற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். அப்பெண்ணின் முதல் கணவர் இறந்த நிலையில், முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு, மார்ச் 2022-இல் அந்தப் பெண்ணிற்கு மூன்றாவது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், ஜூன் 2022-இல் கல்வித் துறையில் சமர்ப்பித்த உறுதிமொழிப் பத்திரத்தில், முதல் கணவரின் மறைவுக்குப் பின் தான் இரண்டாவது திருமணம் செய்யவில்லை என்றும், விதவையாகவே இருப்பதாகவும் பொய்யானத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், 2022-இல் அவருக்கு விதவை கோட்டாவில் மூன்றாம் நிலை அரசு ஆசிரியர் வேலை கிடைத்தது.
வேலை கிடைத்த பிறகு மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், பள்ளி முடிந்த பின்னரும் நீண்ட நேரம் வீட்டிற்கு வராமல் சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசியிலும் மூழ்கியிருந்ததாகவும் கணவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், 2023-இல் பள்ளிச் முதல்வருடன் தொடர்பில் இருந்ததை நேரடியாகக் கண்டதாகவும், கணவர் தங்களுக்குள் தடையாக இருப்பதால் அவரை வழியிலிருந்து அகற்ற திட்டமிட்டு தொலைபேசியில் பேசியதை தான் கேட்டதாகவும் கணவர் கூறியுள்ளார். இதுமட்டுமன்றி, அரசு வேலை கிடைத்த பிறகும் தனது வருமானத்தை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனது மகளுக்கு இலவசப் பள்ளிச் சேர்க்கைப் பலன்களையும் அவர் பெற்றுள்ளார் என்றும் கணவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
