LATEST NEWS
கேமராவைப் பார்த்ததும் எஸ்கேப்… தில்லி மெட்ரோவில் சாமர்த்தியமாகத் திருட முயன்ற மஞ்சள் சேலை பெண்…! அப்புறம் நடந்ததை நீங்களே பாருங்க..!!
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில், குறிப்பாக ராஜீவ் சவுக் போன்ற அதிகக் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் திருட்டுக் கும்பல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிகள் ஏறும்போதும் இறங்கும்போதும் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் அவசரத்தைப் பயன்படுத்தி, தொழில்முறைத் திருடர்கள் பயணிகளின் கவனத்தைத் திருப்பி அவர்களின் பணப்பைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடும் உத்தியைக் கையாண்டு வருகின்றனர்.
வைரலாகும் இந்தக் காணொளியில், மஞ்சள் நிறச் சேலை அணிந்த பெண் ஒருவர், மெட்ரோ ரயிலில் ஏற முயலும் மற்றொரு பெண் பயணியின் ஹேண்ட்பேக்கிற்குள் மிகவும் சாமர்த்தியமாகக் கையை விட்டுப் பொருட்களைத் திருட முயல்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாகத் தனது செயல் கேமராவில் படம்பிடிக்கப்படுவதைக் கவனித்த அந்தப் பெண், உடனடியாகத் தனது கையைப் பையிலிருந்து வெளியே எடுத்துக்கொண்டு, எதுவுமே தெரியாதது போல மிகவும் அப்பாவித்தனமாக நடிக்கத் தொடங்குகிறார்.
https://www.instagram.com/reel/Db2Mki0sefB/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் @activist_karimansari என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்தக் காணொளியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். இதைப் பார்த்த இணையவாசிகள், இதுபோன்ற நபர்களை உடனடியாகக் கைது செய்து தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும், கேமரா இல்லையென்றால் அந்தப் பெண் கையும் களவுமாகத் திருடியிருப்பார் என்றும் கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ராஜீவ் சவுக் மட்டுமன்றி காஷ்மீரி கேட், சாந்தனி சவுக் போன்ற பிற முக்கிய மெட்ரோ நிலையங்களிலும் இதே போன்ற கும்பல்கள் இயங்கி வருவதாகப் பயணிகள் எச்சரிக்கின்றனர்.
