“தாமரையை நோக்கி நகரும் சூரியன்..? திமுகவுக்கு வரப்போகும் நிரந்தர தோல்வி இதுதான்..!” ஸ்டாலினுக்கு புளூசட்ட மாறன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தாமரையை நோக்கி நகரும் சூரியன்..? திமுகவுக்கு வரப்போகும் நிரந்தர தோல்வி இதுதான்..!” ஸ்டாலினுக்கு புளூசட்ட மாறன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்காக, பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக வாக்களிக்காமல் வாக்களிப்பை திமுக புறக்கணிக்கக் கூடும் என்றும், இதன் மூலம் பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரிக்கும் மனநிலைக்கு திமுக வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இச்சூழ்நிலையில், இச்செய்தி குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரபல சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்டமாறன், “தாமரையை நோக்கி நகரும் சூரியன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு வாக்களிக்காமல் திமுக புறக்கணிப்பு நாடகம் நடத்தி மசோதா நிறைவேற வழிவகுத்தால், அது திமுகவின் நிரந்தர தேர்தல் தோல்விகளுக்கே வழிவகுக்கும் என்றும், பாஜகவின் இந்துத்வா அரசியலுக்கு எதிரான கேடயமாக திமுக இருக்கும் என நம்பும் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் சாடியுள்ளார்.

மேலும், விஜய் தலைமையிலான தவெகவின் எழுச்சியை வீழ்த்த பாஜகவுடன் திமுக கைகோர்க்க நினைப்பது, திமுகவையே மொத்தமாக அழித்துவிடும் என அவர் எச்சரித்துள்ளார். மசோதாவிற்கு எதிராக வாக்களிக்காமல் புறக்கணிப்பு நாடகத்தை நடத்தினால், பெரியாரையும் அண்ணாவையும் தலைவர்கள் என்று சொல்வதையே நிறுத்திவிட வேண்டும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவுடன் எந்தக் காலத்திலும் நேரடி அல்லது மறைமுகக் கூட்டணி வைக்க மாட்டோம் என ஊடகங்களின் முன் சொல்லும் துணிச்சல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய புளூசட்டமாறன், இல்லையென்றால் “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை” என்ற பழமொழியைக் கூறி பாஜகவுடன் ஜோடி சேரலாம் என காரசாரமாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in