“பார்க்கவே நெஞ்சு நடுங்குது..! மின் கம்பம் நடும்போது பாய்ந்த அதிவேக கரண்ட்… 5 செகண்டில் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சைப் பிளக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பார்க்கவே நெஞ்சு நடுங்குது..! மின் கம்பம் நடும்போது பாய்ந்த அதிவேக கரண்ட்… 5 செகண்டில் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சைப் பிளக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கான் பைபாஸ் பகுதியில், புதிதாக மின் கம்பங்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போது அங்கிருந்த 32 வயது தொழிலாளி ஒருவர் மின்சாரக் கம்பத்தை உயர்த்த முயன்ற போது, எதிர்பாராதவிதமாக உயர் மின்னழுத்தக் கம்பி மீது உராய்ந்து அதிவேக மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர், அடுத்த ஐந்தே விநாடிகளில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே தனது உயிரை விட்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் திடீர் விபத்தின் போது, அவரது அருகில் பணிபுரிந்து கொண்டிருந்த மற்றொரு ஊழியர் நல்வாய்ப்பாக எந்தக் காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளார்.

Beed – A 32-year-old worker died after receiving a strong electric shock on the bypass road in Majalgaon city when power suddenly started flowing during the installation of a distribution pole. A CCTV video of the accident has surfaced, showing the shocking sequence in which the… pic.twitter.com/tV4hq2zNfr— NextMinute News (@nextminutenews7) August 10, 2026

வெறும் ஐந்தே வினாடிகளில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான மின் விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சரியான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இன்றி மின் விநியோகப் பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாலேயே இதுபோன்ற கொடூர விபத்துகள் தொடர்கதையாகி வருவதாகச் சுட்டிக்காட்டும் பொதுமக்கள், அலட்சியமாகச் செயல்பட்ட மின்வாரியம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in