LATEST NEWS
குஷியோ குஷி..! 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… தமிழக மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி…!!
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு, அதைக் தள்ளுபடி செய்வதற்கான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தள்ளுபடியைப் பெறுவதற்கான தகுதிகள் குறித்து புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வகுக்கப்பட உள்ளன. அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு இந்த நகைக்கடன் தள்ளுபடி சலுகை பொருந்தாது என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் வரவிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடலாம் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய நிம்மதியைத் தரும் என்றாலும், தகுதி வரம்புகள் குறித்த புதிய விதிகள் சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
