உலக நாடுகள் அதிர்ச்சி..! “டிரம்பை கொல்ல ஈரான் சதி” கடைசி நிமிடத்தில் செம டுவிஸ்ட்… சாப்பாட்டு வண்டியில் ஏறி டிரம்ப் ரகசியமாக தப்பிய பரபரப்பு பின்னணி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உலக நாடுகள் அதிர்ச்சி..! “டிரம்பை கொல்ல ஈரான் சதி” கடைசி நிமிடத்தில் செம டுவிஸ்ட்… சாப்பாட்டு வண்டியில் ஏறி டிரம்ப் ரகசியமாக தப்பிய பரபரப்பு பின்னணி…!!

Published

on

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின்போது, ஈரானின் திட்டமிடப்பட்ட படுகொலைத் தாக்குதலில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பியதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறைக்குக் கிடைத்த அதிமுக்கிய மற்றும் நம்பகமான ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த ஜூலை 8-ம் தேதி இந்த அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, டிரம்ப் தனது வழக்கமான அதிகாரப்பூர்வ ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் பயணிப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக C-32A என்ற சிறிய ரக அமெரிக்க ராணுவ விமானம் மூலம் பிரிட்டனுக்கு ரகசியமாகப் பறந்து சென்றுள்ளார். இந்த இடமாற்றத்தை மிகவும் ரகசியமாக வைக்க, டிரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது போல ஊடகங்களுக்கு முன்னால் ஒரு நாடகமாடப்பட்டு, பின்னர் விமான நிலைய உணவு டிரக் மூலம் அவர் ரகசியமாக வெளியேற்றப்பட்டார்.

Advertisement

பிரிட்டனில் உள்ள ஆர்.ஏ.எஃப் மில்டன்ஹால் விமானத் தளத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப், அங்கிருந்து பத்திரமாக அமெரிக்கா போய்ச் சேர்ந்தார். அதேசமயம், டிரம்ப் இல்லாமல் பயணித்த ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களிடம் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்த விபரமும் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in