குஷியோ குஷி..! கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி… காலையிலேயே வெளியான மகிழ்ச்சி செய்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி… காலையிலேயே வெளியான மகிழ்ச்சி செய்தி..!!

Published

on

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்குக் கடன் தள்ளுபடி வழங்கப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த நகைக்கடன் தள்ளுபடிக்கான புதிய தகுதிகள் மற்றும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, தகுதியற்ற நபர்களுக்குக் கடன் தள்ளுபடி கிடைப்பதைத் தடுக்கவும், முறைகேடுகளைக் முற்றிலும் தவிர்க்கவும் ஏதுவாகப் புதிய சரிபார்ப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய புதிய விதிமுறைகளின்படி, அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கடன் பெறும்போது போலியான அல்லது தவறான முகவரி உள்ளிட்ட விவரங்களை அளித்தவர்களுக்கு இந்த 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி சலுகை எக்காரணம் கொண்டும் கிடைக்காது எனத் தெரியவந்துள்ளது. தகுதியுள்ள ஏழை எளிய பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வமான அதிரடி அறிவிப்பை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு முறைப்படி வெளியிடலாம் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in