குஷியோ குஷி..! கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உயர்வு..? தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உயர்வு..? தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..!!

Published

on

தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், தமிழக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகையை கணிசமாக அதிகரிக்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நடுத்தர மக்கள் அவசரத் தேவைகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் பெற பெரிதும் நம்பியிருக்கும் இத்தகைய வங்கிகளில், தற்போதைய சந்தை மதிப்பில் தனியார் நிதி நிறுவனங்களுக்கு இணையாக கூடுதல் தொகை வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை மட்டுமே கடன் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அமைத்து, இனிவரும் நாட்களில் ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை நகைக்கடன் வழங்க புதிய வரம்பை நிர்ணயிக்க அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முறையான ஒப்புதல் கூட்டுறவுத்துறை மூலம் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in