LATEST NEWS
“செங்கோட்டையன் பேச்சு மனதை புண்படுத்தியது” ம.தி.மு.க.வை சிறுமைப்படுத்தலாமா..? அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு துரை வைகோ ஆவேசக் கண்டனம்..!!
அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனத்திற்கு ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது ஆழந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் எதிர்காலம் ம.தி.மு.க.வைப் போல மாறிவிடும் என்று செங்கோட்டையன் பேசிய பேச்சு, கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாகக் கருதப்படும் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய கட்சிகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறார் என்று துரை வைகோ சுட்டிக்காட்டினார். அத்தகைய உயரிய பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவர், ம.தி.மு.க.வை சிறுமைப்படுத்தும் நோக்கில் தரம் தாழ்த்திப் பேசியிருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த சர்ச்சை பேச்சு நா தவறி வந்ததாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட துரை வைகோ, இது போன்ற கருத்துக்கள் தொண்டர்களின் மனதை வெகுவாகப் புண்படுத்தியுள்ளன என்றார். எனவே, மூத்த தலைவர்கள் இனிவரும் காலங்களில் மற்ற கட்சிகளைத் தரம் தாழ்த்திப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
