BREAKING: MLA-க்கள் ராஜினாமா செய்தனர்.. சற்றுமுன் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: MLA-க்கள் ராஜினாமா செய்தனர்.. சற்றுமுன் பெரும் பரபரப்பு..!!

Published

on

43 அதிமுக MLA-க்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு ஆகியோர் இந்த 43 MLA-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் தனித்தனியாகக் கடிதங்களை அளித்திருந்தனர். இந்தச் சூழலில், சபாநாயகர் விதித்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்து, மீதமுள்ளவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை கோரிய கடிதங்களை இரு தரப்பினரும் திடீரென வாபஸ் பெற்றனர். இதன் காரணமாக, அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிடுவதாக சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சபாநாயகரின் இந்த அதிரடி முடிவை எதிர்த்தும், தகுதி நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து நடத்த உத்தரவிடக் கோரியும் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடிதங்கள் வாபஸ் பெறப்பட்டதால் சபாநாயகர் எடுத்த முடிவு சட்டப்படியானது எனக் கூறி ரவியின் வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பின் மூலம் 43 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதி நீக்க சர்ச்சை தற்போதைக்கு முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in