நெஞ்சை பதறவைக்கும் காட்சி…! முன்விரோத தகராறில்.. தடுக்க முயன்ற தாயை 8 அடி தூரம் இழுத்து சென்று நசுக்கிய கொடூர கும்பல்…! உதய்பூரில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சை பதறவைக்கும் காட்சி…! முன்விரோத தகராறில்.. தடுக்க முயன்ற தாயை 8 அடி தூரம் இழுத்து சென்று நசுக்கிய கொடூர கும்பல்…! உதய்பூரில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம், பிரதாப் நகர் காவல் எல்லைக்குட்பட்ட கபில் விஹார் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. யஷ்பிரதாப் சிங் மற்றும் யஷ்பால் சிங் ஜாலா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தகராறையடுத்து, யஷ்பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் ஸ்கார்பியோ மற்றும் தார் கார்களில் திவ்யராஜ் சிங் என்பவரின் வீட்டிற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

திவ்யராஜின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடியாட்கள் தடிகளாலும் கற்களாலும் தாக்கிச் சேதப்படுத்தினர். சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த திவ்யராஜின் தாயார் ஊர்மிளா கன்வர், தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோட முயன்ற கும்பலைத் தடுக்க ஸ்கார்பியோ காரின் முன்பாக நின்றார். ஆனால், காரை ஓட்டிவந்த நபர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கி, ஊர்மிளா மீது ஏற்றி சுமார் 7 முதல் 8 அடி தூரம் இழுத்துச் சென்று கொடூரமாக நசுக்கிவிட்டுத் தப்பினர். இந்த பயங்கரக் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisement

https://www.instagram.com/reel/Db0Tx_RHecT/?utm_source=ig_web_button_share_sheet

https://www.facebook.com/watch/?v=1542784304195901
https://www.facebook.com/watch/?v=1542784304195901

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ஊர்மிளாவை, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பிரதாப் நகர் காவல் நிலைய அதிகாரி அஜய் சிங் ராவ் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in