“மருமகளின் 25% சம்பளம் இனி மாமியாருக்கு..” கணவன் வேலையை வாங்கிட்டு மாமியாரை கழட்டிவிட்ட மருமகள்… கோர்ட் கொடுத்த தரமான சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மருமகளின் 25% சம்பளம் இனி மாமியாருக்கு..” கணவன் வேலையை வாங்கிட்டு மாமியாரை கழட்டிவிட்ட மருமகள்… கோர்ட் கொடுத்த தரமான சம்பவம்..!!

Published

on

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வு, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற்ற மருமகளின் மாதச் சம்பளத்தில் இருந்து 25 சதவீதத் தொகையைப் பிடித்து அவரது மாமியாருக்கு வழங்க வேண்டும் என்று அஜ்மீர் வித்யுத் வித்ரன் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஆனந்த் சர்மா அடங்கிய தனிநீதிபதி அமர்வு, மாமியார் மற்றும் மாமனார் தாக்கல் செய்த மனுவை விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியது. விசாரணையின் போது மாமனார் இறந்துவிட்ட நிலையில், எஞ்சியுள்ள மாமியாருக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை இந்த 25 சதவீதத் தொகை அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

AVVNL நிறுவனத்தில் உதவித் தொழில்நுட்பப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது பெற்றோர் அளித்த ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ் மற்றும் குடும்பத்தைப் பராமரிப்பதாக மருமகள் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தின் அடிப்படையில் அவருக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. ஆனால், வேலை கிடைத்த சில காலத்திலேயே அவர் புகுந்த வீட்டை விட்டு வெளியேறி மறுமணம் செய்துகொண்டதாகவும், மாமியார்-மாமனாரைப் பராமரிக்காமல் கைவிட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், 2018-ஆம் ஆண்டு அவர்கள் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் கோரினர்.

Advertisement

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை என்பது தனிநபரின் உரிமையோ அல்லது சலுகையோ அல்ல; அது ஒரு குடும்பத்தைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் நலத்திட்ட அமைப்பாகும் என்று சுட்டிக்காட்டியது. வேலை பெற்ற பின் குடும்பப் பராமரிப்புப் பொறுப்பில் இருந்து விலகுவது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது என நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, மருமகளின் மாதச் சம்பளத்தில் 25% பிடித்து மாமியாருக்கு வழங்க உத்தரவிட்டதோடு, உயிரிழந்த ஊழியரின் பணிநிறைவுப் பயன்களை 30 நாட்களுக்குள் மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவருக்கும் பாதியளவு பிரித்து வழங்கவும் ஆணையிட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in