சாகும் நிலையில் இருந்தால்கூட.. எங்க நாக்கு அந்த வார்த்தையை தான் ஒலிக்கும் மேடையில் உருகிய அமைச்சர் சேகர்பாபு… நெகிழ்ந்துபோன ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாகும் நிலையில் இருந்தால்கூட.. எங்க நாக்கு அந்த வார்த்தையை தான் ஒலிக்கும் மேடையில் உருகிய அமைச்சர் சேகர்பாபு… நெகிழ்ந்துபோன ஸ்டாலின்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தை ‘பால்வாடி இயக்கம்’ எனக் கடுமையாக விமர்சித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட திமுகவோடு புதிதாகத் தொடங்கப்பட்டக் கட்சியை ஒப்பிட்டு இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பவள விழா கண்ட ஒரு மாபெரும் இயக்கம். ஆனால், இப்போது தொடங்கப்பட்டிருக்கும் பால்வாடி இயக்கம் இந்த எஃகு போன்ற இயக்கத்தோடு போட்டி போடுகிறது. அரசியலில் நீங்கள் ஒரு அடி முன்னேறி வைத்தால், நாங்கள் 10 அடிகள் முன்னேறி வருவோம்” என்று தவெக தலைமையை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

Advertisement

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்திய அவர், “ஒருவேளை மரணத்தின் விளிம்பில் நாங்கள் இருந்தால் கூட, எங்கள் நாக்கு ‘ஸ்டாலின் வாழ்க! வாழ்க!’ என்றுதான் ஒலிக்கும்” என உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார். மூத்த அமைச்சரின் இந்தச் சாடல் தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in