அடக்கொடுமையே.. வீட்டில் தனியாக இருந்த பெண்.. நள்ளிரவில் கதவைத் தட்டி ஆபாசமாக மிரட்டி.. விட்டு வாசலில் ராபிடோ ஊழியரின் அசிங்கமான காரியத்தை பாருங்க.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே.. வீட்டில் தனியாக இருந்த பெண்.. நள்ளிரவில் கதவைத் தட்டி ஆபாசமாக மிரட்டி.. விட்டு வாசலில் ராபிடோ ஊழியரின் அசிங்கமான காரியத்தை பாருங்க.. வைரல் வீடியோ..!!

Published

on

சமூக வலைத்தளங்களில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள ராபிடோ டெலிவரி ஊழியரின் இந்த அதிர்ச்சியூட்டும் அத்துமீறல் சம்பவம், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிற்கு, ஆர்டர் செய்த 4 மணி நேரம் தாமதமாக வந்த அந்த ஊழியர், தொடக்கம் முதலே போனில் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு அந்தப் பெண்ணை “ரண்டி” என மிகவும் இழிவான வார்த்தைகளால் திட்டி, வீட்டின் இரும்பு கேட்டை பலமாகத் தட்டி, கையை உள்ளே விட்டு அதைத் திறக்கவும் முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உடனடியாக கேட்டைப் பூட்டியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத அந்த ஊழியர், அந்த வீட்டின் வாசலிலேயே சிறுநீர் கழித்துவிட்டுச் சென்றுள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமான வாய்ஸ் நோட்டுகளை அனுப்பி, தான் அங்கே சிறுநீர் கழித்ததை ஒப்புக்கொண்டு மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

https://twitter.com/i/status/2103902897117520225

இந்தக் கொடூரமான சம்பவத்தால் அந்தப் பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், ராபிடோ நிறுவனத்தின் அலட்சியப் போக்கு பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீதம் நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகியும், அந்தப் பெண் கொடுத்த புகார்களுக்கு அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் எந்தவொரு முறையான பதிலோ அல்லது நடவடிக்கையோ எடுக்கவில்லை. மாறாக, “நீங்கள் பலமுறை புகார் அளித்துள்ளீர்கள்” என்று கூறி வழக்கை மூடி மறைக்க முயல்வதாக அந்தப் பெண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். தங்களது ஊழியர்களின் பின்னணியை முறையாகப் பரிசோதிக்காமல் பணியில் அமர்த்தும் ராபிடோ போன்ற நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அந்த ஊழியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் இணையத்தில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in