“அடக்கடவுளே.. நாட்டின் மானமே போச்சு..! கேக்குக்காக இப்படியா பண்ணுவாங்க..?!” இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்..! வைரலாகும் பாகிஸ்தான் சுதந்திர தினக் கூத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடக்கடவுளே.. நாட்டின் மானமே போச்சு..! கேக்குக்காக இப்படியா பண்ணுவாங்க..?!” இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்..! வைரலாகும் பாகிஸ்தான் சுதந்திர தினக் கூத்து..!!

Published

on

ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட வேளையில், அங்கு நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில், ஒரு பெரிய கேக் வெட்டப்பட்டது. கேக் வெட்டிய பிறகு அங்கிருந்த மக்களுக்கு அதை முறைப்படி விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அடுத்த சில விநாடிகளிலேயே அங்கு திரண்டிருந்த கூட்டம் பொறுமையின்றி கேக்கைப் பிடுங்குவதற்காக அதன் மீது பாய்ந்தது.

வைரலாகும் அந்த வீடியோவில், மக்கள் கேக் வழங்கப்படுவதற்காகக் காத்திருக்காமல், தங்களின் கைகளாலேயே கேக்கை அள்ளிப் பிடுங்கிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இந்த முண்டியடிப்பில் ஈடுபட்டதால், சில நொடிகளிலேயே அந்த பெரிய கேக் முழுவதும் இல்லாமல் போனது. அங்கிருந்த ஒருவர் இந்தச் சம்பவத்தைத் தனது மொபைல் போனில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற, இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியது.

Advertisement

https://www.instagram.com/reel/Db_AWtEo0dm/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வீடியோ வெளியானது முதல் பலரும் பாகிஸ்தான் மக்களின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பல சமூக வலைத்தளப் பயனாளர்களே இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, “சுதந்திர தினம் போன்ற ஒரு தேசிய நன்னாளில் இத்தகைய தரமற்ற நடந்து கொள்ளும் முறை நாட்டின் மரியாதையைச் சீர்குலைக்கிறது” என்று விமர்சித்துள்ளனர். மேலும் சிலர், “மக்கள் நாட்டின் எல்லாப் பிரச்னைகளுக்கும் அரசை மட்டுமே குற்றம் சொல்கிறார்கள், ஆனால் தங்களின் சொந்த நடத்தையும் பொறுப்பும் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசிப்பதில்லை” என்றும், “இவர்கள் வாழ்க்கையிலேயே முதல்முறையாக கேக்கைப் பார்ப்பது போல நடந்துகொள்கிறார்கள்” என்றும் காரசாரமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in