LATEST NEWS
பேயா..? AI-ஆ..? பூனை கடந்து சென்ற அடுத்த நொடி… படிக்கட்டில் சுருண்டு விழுந்த பெண்.. எகிப்தில் நடந்த மர்ம சம்பவம்..! வைரல் வீடியோவால் இணையத்தில் தொடரும் விவாதம்..!!
எகிப்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு விசித்திரமான சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையத்தைப் பயன்படுத்தும் மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டிடத்தின் படிக்கட்டில் பெண் ஒருவர் சாதாரணமாக இறங்கி வரும்போது, எதிர் திசையில் ஒரு பூனை படிக்கட்டில் ஏறி வருகிறது. அந்தப் பெண் பூனையைப் பார்த்துக்கொண்டே வர, இருவரும் ஒன்றையொன்று கடந்து செல்கின்றனர். ஆனால், பூனை அவரைக் கடந்த அடுத்த நொடியே, அந்தப் பெண் எதிர்பாராத விதமாக திடீரெனத் தரையில் சுருண்டு விழுகிறார்.
அருகில் வேறு எந்த நபரும் இல்லாத நிலையில், யாரோ ஒருவர் அவரைப் பலமாகத் தள்ளிவிட்டது போல அந்தப் பெண் கீழே விழுவது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ‘dailydastak.in’ என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து தீயாகப் பரவி வருகிறது. வீடியோவைப் பார்த்தவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அல்லது பேய்/ஆவி தான் அவரைத் தள்ளிவிட்டதாகக் கூறி தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மறுபுறம், இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றும், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அல்லது எடிட் செய்யப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றும் பலர் வாதிட்டு வருகின்றனர். பூனையின் இயல்பான நடத்தை மற்றும் அந்தப் பெண்ணின் விசித்திரமான வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டி இணையவாசிகள் பல்வேறு நகைச்சுவையான மற்றும் சுவாரசியமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், கூடுதல் ஆதாரங்கள் இல்லாததால் இது உண்மையிலேயே நடந்த சம்பவமா அல்லது AI வழியே உருவாக்கப்பட்டதா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை.
