LATEST NEWS
“மனுஷனா நீ..?” சிறுமி தலைய தொட்டது ஒரு குத்தமா..? சிங்கப்பூரில் 70 வயது முதியவரை கீழே தள்ளிவிட்ட நபர்… இணையத்தில் குவியும் கண்டனம்..! வைரலாகும் பரபரப்பு காட்சி..!!
சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள ஒரு காபி ஷாப்பில் 70 வயதைக் கடந்த முதியவர் ஒருவர், சிறுமி ஒருவரின் தலையைத் தொட்டுத் தடவியதற்காகக் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Bei-ing Wanton Noodle’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று பகிரப்பட்ட பதிவு மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலமாக இச்சம்பவம் வெளியுலகிற்குத் தெரியவந்தது. அந்த முதியவரின் மகன் வெளியிட்ட பதிவில், பாதிக்கப்பட்ட நபர் தனது தந்தை என்றும், அவருக்கு நடப்பதில் சிரமம் இருப்பதால் அங்குள்ள மேசைகளைப் பிடித்துக்கொண்டே நகர்ந்து செல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
CCTV காட்சிகளின்படி, அங்கிருந்த ஒரு மேசையைக் கடந்து சென்றபோது, முதியவர் அங்கே அமர்ந்திருந்த ஒரு சிறுமியின் தலையை அன்போடு தொட்டதாகத் தெரிகிறது. உடனே சிறுமியுடன் இருந்த பெண் அவரது கையைத் தட்டிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில், அந்த மேசையிலிருந்து வெளியே சென்று திரும்பிய ஒரு நபர், முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைப் பலமாகத் தள்ளிவிட்டுள்ளார். இதில் முதியவர் நிலைதடுமாறித் தரையில் விழுந்தார். தள்ளிவிட்ட அந்த நபர் பின்னர் மன்னிப்பு கேட்டு, முதியவருக்குக் குடிக்க பானம் ஒன்றை வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்பட்டாலும், விழுந்த அதிர்ச்சியிலும் அடிபட்டதிலும் அந்த முதியவருக்குக் கடுமையான முதுகுவலி ஏற்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/DcGkf4WidiJ/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 15 அன்று முதியவரின் மகன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிய உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, ஆகஸ்ட் 16 அன்று காவல்துறை தரப்பில் வெளியிட்ட தகவலில், இச்சம்பவம் தொடர்பாகப் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
