LATEST NEWS
பகீர் விடியோ..! பெட்ரோல் பங்க் அருகே கொழுந்துவிட்டு எறிந்த சொகுசு மெர்சிடிஸ் கார்..! நூலிழையில் தப்பிய பெரும் அசம்பாவிதம்.. பிம்பரி-சின்ச்வாட்டில் தீயணைப்பு வீரர்களின் அதிரடி நடவடிக்கை..!!
பிம்பரி-சின்ச்வாட்டில் உள்ள சிகாலி, ஷிவ் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே ஆகஸ்ட் 16, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் சொகுசு மெர்சிடிஸ் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. பெட்ரோல் பங்கிற்கு மிக அருகிலேயே இந்த விபத்து நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. காரின் முன் பகுதியிலும் எஞ்சின் பகுதியிலும் பரவிய தீ, உடனடியாக முன் பகுதி முழுவதற்கும் பரவியது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பிம்பரி-சின்ச்வாட் மாநகராட்சி தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெட்ரோல் பங்க் அருகில் தீ விபத்து ஏற்பட்டதால், தீ மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டுச் சில நிமிடங்களிலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் காரின் எஞ்சின் மற்றும் போனட் பகுதி உட்பட முன் பகுதி முற்றிலுமாக எறிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் எவருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை; இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
