LATEST NEWS
ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்.. தரைக்கும் லிஃப்டுக்கும் இடையில் சிக்கிய 50 வயது பெண்.. இணையத்தில் வைரலாகும் நெஞ்சை உலுக்கும் சிசிடிவி வீடியோ..!!
ஆந்திரப் பிரதேசம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் பகுதியில் உள்ள சாய் சூர்யா அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்டில் சிக்கிப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினிதா (50) என்ற பெண் லிஃப்ட்டில் இருந்து வெளியேற முயன்றபோது, கதவுகள் மூடப்படாமல் லிஃப்ட் திடீரெனக் கீழே இறங்கியுள்ளது. இதனால் தரைக்கும் லிஃப்டுக்கும் இடையில் அவர் சிக்கிக்கொள்ள, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்; எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
సీసీటీవీ ఫుటేజ్..!
లిఫ్ట్లో ఇరుక్కుని మహిళ మృతి
ప్రకాశం జిల్లా ఒంగోలులోని మార్కెట్ సెంటర్ సాయి సూర్య అపార్ట్మెంట్ లిఫ్ట్లో ప్రమాదవశాత్తు ఇరుక్కున్న వినీత (50) అనే మహిళ
లిఫ్ట్ నుండి దిగుతున్న సమయంలో గేట్లు వేయకుండానే కిందికి ఒక్కసారిగా దిగిపోయిన లిఫ్ట్
దీంతో ఆమె ఫ్లోర్,… pic.twitter.com/ZnYuB808JL— Telugu Scribe (@TeluguScribe) August 19, 2026
இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு அல்லது முறையான பராமரிப்பின்மை காரணமாகவே இத்தகைய துயரச் சம்பவங்கள் அரங்கேறுவதாகக் கூறி நெட்டிசன்கள் தங்களது கவலைகளைத் தெரிவித்து வருவதுடன், இது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
