“அம்மாடியோ காரே சுக்குநூறாக நொறுங்கியது..!” சிஎன்ஜி பங்க்கில் அரங்கேறிய அதிர்ச்சி விபத்து… திக் திக் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மாடியோ காரே சுக்குநூறாக நொறுங்கியது..!” சிஎன்ஜி பங்க்கில் அரங்கேறிய அதிர்ச்சி விபத்து… திக் திக் வீடியோ..!!

Published

on

மத்திய குஜராத்தின் கர்ஜன் நகரில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தில், கார் ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் பயங்கரமாக வெடித்துச் சிதறிய விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். எரிவாயு நிரப்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடி விபத்தின் தாக்கம் எந்த அளவுக்குக் கொடூரமாக இருந்தது என்றால், காரில் இருந்த அந்த சிலிண்டர் அப்படியே இரண்டு துண்டுகளாக உடைந்து சிதறியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நபர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து நடந்த சம்பவ இடத்தில் காரின் பாகங்கள் மற்றும் சிலிண்டர் துண்டுகள் சிதறிப் கிடந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதோடு, சிலிண்டர் வெடித்ததற்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in