“விஜய் என் வீட்டுல 3 மணி நேரம் காத்திருந்தார்” என்னை ‘மற்றும் பலர்’னு சொல்றாரே.. ரகசியத்தை உடைத்த எடப்பாடி பழனிசாமி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் என் வீட்டுல 3 மணி நேரம் காத்திருந்தார்” என்னை ‘மற்றும் பலர்’னு சொல்றாரே.. ரகசியத்தை உடைத்த எடப்பாடி பழனிசாமி..!!

Published

on

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (EPS), தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யை நோக்கி அதிரடியான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். தவெக தலைவர் விஜய் தங்களை “மற்றும் பலர்” என்று சுட்டிக்காட்டிப் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த உரை அமைந்துள்ளது.

தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “என்னை மற்றும் பலர் என்று கூறும் முதலமைச்சர் விஜய், ஒரு காலத்தில் தனது படத்தின் ரிலீஸுக்கான அனுமதி கேட்டு எனது இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்தார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், “இதை நான் இதுவரை எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் சொன்னது கிடையாது. ஆனால், அன்று அவரது படம் திரைக்கு வருவதற்கு முழு முதற்காரணமாக இருந்தவன் இந்த இ.பி.எஸ் தான்” என்றும் அவர் பேசினார்.

Advertisement

கடந்த காலங்களில், எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக இருந்தபோது, நடிகர் விஜய் அவரை நேரில் சந்தித்துப் பேசிய நிகழ்வுகளை ஒட்டி இந்த விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, 2017 ஆம் ஆண்டில் ‘மெர்சல்’ திரைப்பட வெளியீட்டின் போது எழுந்த கேளிக்கை வரிப் பிரச்சினையின் போதும், பின்னர் 2020 ஆம் ஆண்டில் ‘மாஸ்டர்’ திரைப்பட வெளியீட்டின் போதும், திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி கோரி விஜய்யும் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in