LATEST NEWS
“என் எதிர்காலமே போச்சு..!” தந்தை கேட்ட கேள்விக்கு பள்ளி நிர்வாகம் செய்த பகீர் காரியம்.. நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடிய மாணவியின் கண்ணீர் வீடியோ..!!
ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களுக்கு, விவேகானந்த் வித்யா மந்திர் பள்ளியின் மாணவி சித்தி சிங் எழுதும் நீதி வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில், நான் ராஞ்சி, துர்வா, செக்டர் 2-ல் உள்ள விவேகானந்த் வித்யா மந்திர் பள்ளியின் மாணவி சித்தி சிங். எனது தந்தை பள்ளியின் சட்டவிரோத மற்றும் வலுக்கட்டாயக் கட்டண உயர்வை எதிர்த்து, ராஞ்சி துணை ஆணையரிடமும் பள்ளியிடமும் புகார் அளித்ததே எங்களின் ஒரே தவறாகிவிட்டது. இதற்குப் பழிவாங்கும் நோக்கில், கடந்த நான்கு மாதங்களாகப் பள்ளி நிர்வாகம் என்னை மீண்டும் சேர்க்க மறுத்து பழிவாங்கி வருகிறது. நிலுவைக் கட்டணத்தைச் செலுத்த கடந்த 2-3 மாதங்களாகத் தொடர்ந்து போராடியும், பள்ளி நிர்வாகம் எனது கல்வி உரிமையைப் பறித்து, என்னை அலைக்கழித்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
मैं सिद्धि सिंह, विवेकानंद विद्या मंदिर सेक्टर 2 धुर्वा रांची की छात्रा हूं। मेरा कसूर मात्र इतना है कि स्कूल के द्वारा जबरन बढ़ाई जा रही फीस और सिलेबस का विरोध मेरे पिता के द्वारा किया गया, और इसकी शिकायत उपायुक्त रांची और स्कूल से किया गया। बदले में आज चार महीना बीत जाने के बाद… pic.twitter.com/Kk2IzDSPhN— mukesh kumar (@Mukesh_Ranchi) August 19, 2026
இதுகுறித்து ராஞ்சி துணை ஆணையர், சிபிஎஸ்இ மற்றும் ராஞ்சி கல்வி இயக்குநர் போன்ற அனைத்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து, அவர்களின் உத்தரவுகளை நான் முறையாகப் பின்பற்றிய போதிலும், எந்த அதிகாரியும் எனக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. இந்த ஊழல் நிறைந்த கல்வி அதிகாரத்துவ அமைப்பினால் தற்போது நான் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளேன்; எனது எதிர்காலமும் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, எனது கல்வி உரிமையை மீட்டெடுத்து, எனக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
