“வேலியே பயிரை மேய்ந்த அவலம்..” கணவனுடன் சண்டை.. புகார் கொடுக்க வந்த பெண்ணை நள்ளிரவில் சீரழித்த வயர்லெஸ் ஆபரேட்டர்.. . 15 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வேலியே பயிரை மேய்ந்த அவலம்..” கணவனுடன் சண்டை.. புகார் கொடுக்க வந்த பெண்ணை நள்ளிரவில் சீரழித்த வயர்லெஸ் ஆபரேட்டர்.. . 15 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா-கர்சவான் மாவட்டத்தின் கம்ஹரியா காவல் நிலையத்திற்குள், பாதுகாப்பு தேடி வந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த 15 போலீசார் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகப் புகார் அளிக்கவும், பாதுகாப்பு கோரியும் அந்தப் பெண் இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பணியில் இருந்த போலீசார், அவரை ஓய்வெடுப்பதற்காக ஒரு அறையில் தங்க வைத்துள்ளனர். ஆனால், அதே காவல் நிலையத்தில் வயர்லெஸ் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த நீரஜ் லக்ரா என்பவர், அந்த அறைக்குள் புகுந்து அந்தப் பெண்ணை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, காவல்துறையின் உயர் அதிகாரிகள் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்தனர். கடமையில் அலட்சியமாக இருந்ததற்காவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறியதற்காகவும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உட்பட மொத்தம் 15 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் பரிந்துரையின் பேரில், முதன்மைக் குற்றவாளியான நீரஜ் லக்ரா கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து, இந்த குற்றத்திற்கு உடந்தையாகவும் அலட்சியமாகவும் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் சாகு மற்றும் கான்ஸ்டபிள் சந்தோஷ் குமார் ராய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in