LATEST NEWS
“‘அலைபாயுதே’ பாணியில் ரகசிய திருமணம்..” தனிகுடித்தனம் வர மறுத்த காதல் மனைவி… மனமுடைந்து த.வெ.க. நிர்வாகி எடுத்த விபரீத முடிவு..! கதறும் பெற்றோர்..!!
சென்னையில் தனிகுடித்தனம் செல்ல காதலி மறுத்ததால் விரக்தியடைந்த த.வெ.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த முக்தி (எ) முத்தையா (வயது 27), த.வெ.க. 35-வது வட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம் செய்த இந்த விவரத்தை இருவரும் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அவரவர் பெற்றோருடன் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தனது காதல் மனைவியிடம் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தலாம் என்று முத்தையா கூறினார். ஆனால் அதற்கு அவரது காதலி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்தையா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார் முத்தையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கیடையே, மகனின் தற்கொலைக்கு காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
