LATEST NEWS
மிதந்துகிட்டே யோகாவா..? விண்வெளியில் மாஸ் காட்டிய ஐரோப்பிய வீராங்கனை..! டியோவைக் கண்டு வியக்கும் நெட்டிசன்கள்..!!
சர்வதேச விண்வெளி நிலையத்தின் நுண்ஈர்ப்பு விசையில், ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனோட் யின் யோகா பயிற்சிகளைச் செய்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில், மிதந்தபடியே அவர் செய்த இந்த உடற்பயிற்சிகள் நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. இதைக்கண்ட பயனர்கள் பலர், இந்த விண்வெளி யோகா மிகவும் “அற்புதமானது மற்றும் நேர்த்தியானது” எனத் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுப் பாராட்டி வருகின்றனர்.
பூமியில் பல வருடங்களாகத் தினமும் யோகா செய்வதைப் வழக்கமாகக் கொண்டிருந்த சோஃபி, அதை விண்வெளிப் பயணத்தின்போதும் வெற்றிகரமாகத் தொடர்கிறார். விண்வெளியில் ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு தளர்வு பெற, தினமும் மாலையில் 30 நிமிடங்கள் இந்த மெதுவான யோகா பயிற்சிகளைச் செய்வதாகப் பதிவிட்டுள்ளார். வேகமான யோகா முறைகளைப் போலல்லாமல், ‘யின் யோகா’ என்பது நீண்ட நேரம் ஒரே நிலையில் தசைகளை நீட்டிச் செய்யும் அமைதியான பயிற்சியாகும்.
https://www.instagram.com/reel/DbOIACui3-h/?utm_source=ig_web_button_share_sheet
ஈர்ப்பு விசை இல்லாததால், தரையில் காலூன்றிப் பயிற்சி செய்ய முடியாது என்பதால், சுவர்களில் உள்ள பிடிமானங்கள், கால் முட்டுகள் மற்றும் உடலின் நடுப்பகுதி கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சோஃபி இந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். இந்த நுட்பங்களை விரிவாக விளக்கும் முழுமையான வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “விண்வெளி யோகா கலை மற்றும் அறிவியலின் அழகான கலவை” எனப் பலரும் சோஃபியின் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
