LATEST NEWS
“என்னால ஆசையை அடக்க முடியல” மனைவியும் அப்படி ஆகிட்டா.. ஆணுறுப்பை கோடரியால் வெட்டிய நபர்… பகீர் கிளம்பும் சம்பவம்..!!
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், தன்னுடைய பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கோடரியால் ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர மன உளைச்சலில் இருந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அவரது உடல்நலம் மெல்லத் தேறிவருகிறது.
இந்த விபரீத முடிவுக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மனைவி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனால் குடும்பத்தை கவனிப்பதிலும், மனைவியைப் பராமரிப்பதிலும் அந்த நபருக்கு நீண்ட நாட்களாகக் கடுமையான மன அழுத்தம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொருபுறம், அந்த நபருக்கு தீவிரமான ஆன்மிக ஈடுபாடு இருந்துள்ளது. உலக வாழ்க்கையைத் துறந்து ஆன்மிகப் பாதையில் செல்ல அவர் விரும்பியுள்ளார். ஆனால், தனது பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதது அவருக்குப் பெரும் தடையாக இருந்துள்ளது. இந்த மனப்போராட்டமும், குடும்பச் சூழ்நிலையும் ஏற்படுத்திய கடும் மன உளைச்சலே அவரை இந்த விபரீத செயலை நோக்கித் தூண்டியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
