LATEST NEWS
பள்ளி வளாகத்தில் மலம் கழித்து.. மதுபோதையில் மாணவர்களை சுத்தம் செய்யவைத்து …தலைமையாசிரியர் செய்த அருவருப்பான செயல்..!!
மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் உள்ள அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் (50) என்ற தலைமையாசிரியர் தொடர்ந்து மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. மதுபோதையில் அவர் பள்ளிக்கு வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, பள்ளியின் ஒழுக்கமும் சீர்கெடுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமையாசிரியர் சமைலால் கோல் பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தான் செய்த அந்த அசுத்தத்தை அங்கிருந்த பள்ளி மாணவர்களை வைத்தே அவர் கட்டாயப்படுத்தி சுத்தம் செய்ய வைத்துள்ளார். இந்த கொடூரமான செயல் குறித்த தகவல் வெளியாகி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் சமைலால் கோலுக்கு விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவரது விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
