இனி அலைய வேண்டாம்..! உங்க ரேஷன் கடை திறந்துருக்கா..? மூடியிருக்கா..? வீட்ல இருந்தே இப்படி தெரிஞ்சுக்கோங்க…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி அலைய வேண்டாம்..! உங்க ரேஷன் கடை திறந்துருக்கா..? மூடியிருக்கா..? வீட்ல இருந்தே இப்படி தெரிஞ்சுக்கோங்க…!!

Published

on

உங்கள் ரேஷன் கடை திறந்துள்ளதா என்பதைப் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மிக எளிதாகப் பார்த்துக் தெரிந்துகொள்ளலாம். இதற்காகத் தமிழக அரசு வழங்கியுள்ள அதிகாரப்பூர்வ TNPDS இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு முகப்புப் பக்கத்தில் உள்ள ‘பொது விநியோக திட்ட அறிக்கைகள்’ என்ற பிரிவை கிளிக் செய்து, உங்கள் மாவட்டம், வட்டாரம் மற்றும் குறிப்பிட்ட கடையைத் தேர்வு செய்ய வேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்த பின், திரையில் உங்கள் கடையின் விபரங்களுக்கு நேரே ‘ஆன்லைன்’என்று காட்டினால் கடை திறந்துள்ளது என்றும், ‘ஆப்லைன்’என்று காட்டினால் கடை மூடப்பட்டுள்ளது என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். இது தவிர, இணைய வசதி இல்லாதவர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து SMS அனுப்புவதன் மூலமும் ரேஷன் கடை செயல்படுகிறதா என்ற தகவலைத் உடனடியாகப் பெற முடியும்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in