LATEST NEWS
குஷியோயோ குஷி..! ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகம்.. தமிழக அரசு குட் நியூஸ்..!!
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரத்திலான அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது விநியோகிக்கப்படும் அரிசியில் புழுங்கல் அரிசியில் 16 சதவீதமும், பச்சரிசியில் 25 சதவீதமும் வரை உடைந்த அரிசி இருக்க அனுமதிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் அரிசியின் தரத்தை உயர்த்தும் வகையில், புழுங்கல் அரிசியில் 5 சதவீதமும், பச்சரிசியில் 10 சதவீதமும் மட்டுமே உடைந்த அரிசி இருக்க வேண்டும் என புதிய அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட தரத்திலான அரிசி விநியோகத் திட்டம் முதற்கட்டமாக ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழகத்திலும் இத்திட்டம் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.
