மக்களே குட் நியூஸ்..! ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களே குட் நியூஸ்..! ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

Published

on

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை வரவுள்ளதால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யத் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாகப் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் எந்தவிதப் பாதிப்பும் அல்லது சிரமமும் அடைந்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த ஞாயிற்றுக்கிழமை வேலை நாளுக்காக ரேஷன் கடைப் பணியாளர்களுக்குப் பதிலாக மற்றொரு நாளில் ஈடுசெய் விடுமுறை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) ரேஷன் கடைகளுக்குப் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in