ரூ.2,500 கோரிக்கை ஒருபுறம்… ஆப்பு வைக்கும் அதிகாரிகள் மறுபுறம்..! என்ன நடக்கிறது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரூ.2,500 கோரிக்கை ஒருபுறம்… ஆப்பு வைக்கும் அதிகாரிகள் மறுபுறம்..! என்ன நடக்கிறது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்..?!

Published

on

மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில், தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே இந்த நிதி உதவி சென்று சேருவதை உறுதிசெய்யும் பொருட்டு, திட்டத்தின் வழிகாட்டுதல்களையும் தகுதிகளையும் அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

மற்றொருபுறம், அரசு நிர்ணயித்துள்ள தகுதி நிபந்தனைகளை மீறி சிலர் தவறான வழிகளில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையைப் பெற்று வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பிரதிநிதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தகுதியற்ற நபர்களைக் கண்டறிந்து அவர்களைப் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்குவதற்கான தீவிர நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in