LATEST NEWS
“நாம முந்திக்கலாம்” பாமகவுக்கு ஆப்பு… திமுகவுக்கு அதிர்ச்சி…. விஜய்யுடன் திருமாவளவன் கைகோர்த்தது ஏன்..? வெளிவந்த சீக்ரெட்..!!
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைப்பதை தலைவர் தொல். திருமாவளவன் உறுதிசெய்துள்ளதன் பின்னணியில் பல்வேறு சுவாரசியமான அரசியல் கணக்குகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திமுக சார்பில் பாஜகவிடம் காட்டப்பட்டு வரும் மென்மையான அணுகுமுறையும் இரு கட்சிகளுக்கும் இடையேயான நெருக்கமுமே திருமாவளவனின் இந்த முடிவுக்கு முதன்மையான காரணியாகப் பார்க்கப்படுகிறது.
அரசியல் சூழலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற கொள்கை அடிப்படையிலான நடைமுறையை திமுக பின்பற்றி வருவதை, தத்துவார்த்த ரீதியாகத் திருமாவளவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. திமுகவின் இந்த நகர்வுகள் கொள்கை முரண்பாடுகளை ஏற்படுத்தியதே விசிக தனது அரசியல் பாதையை மாற்றி யோசிக்கத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், தவெக கூட்டணியை நோக்கிய நகர்வில் விசிக தொடர்ந்து தாமதம் காட்டினால், அந்த வாய்ப்பு பாமக பக்கம் சென்றுவிடக்கூடும் என்ற அச்சமும் நிலவியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, திருமாவளவன் தனது கூட்டணி குறித்த முடிவை விரைவாக முடிவெடுத்து அறிவித்தார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
