CINEMA
சும்மா அதிருமே…! நீண்ட இடைவெளிக்கு பின்…. செல்வராகவன்-ஜிவி பிரகாஷ் மீண்டும் கூட்டணி….!!
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன்பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபலமானார். பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா தான் இவருடைய திரைப்படங்களில் இசையமைப்பாளர்.
இருப்பினும் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பார். இந்த படத்தில் ஜிவி இசையமைத்த பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. செல்வராகவன் இயக்கும் புதுப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.