CINEMA
வெற்றிமாறன் சார்…! ப்ளீஸ் நாம ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும்…. ஜூனியர் NTR விருப்பம்…!!
இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஜான்வி கபூர், தமிழிலிருந்து கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையி சென்னையில் நடைபெற்ற தேவாரா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர், அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள் .
அப்பொழுது நடிகர் ஜூனியர் என்டிஆர் பேசுகையில், தமிழில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் வெற்றிமாறன். சார் ப்ளீஸ் நாம் இருவரும் இணைந்து நேரடி தமிழ் படம் பண்ணலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.