CINEMA
இனி வாய்ப்பே கிடைக்காது…. ஷாக் கொடுத்த வெற்றிமாறன்…. சூரி பகிர்ந்த தகவல்….!!
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கிய சூரி தற்போது ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவரது திரைப்பயணத்தையே மாற்றி போட்டது.
சமீபத்தில் சூரி நடித்து வெற்றிமாறன் இயக்கிய திரைப்படமான கருடன் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி நடிகர் ஆக இருந்த சூரி தற்போது மாறுபட்ட கோணத்தில் நடித்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தையும் கூடுதல் எதிர்பார்ப்பையும் கொடுத்துள்ளது.
இந்நிலையில் சூரி பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் தனக்கு கொடுத்த அட்வைஸ் பற்றியும் அதன் பிறகு அவர் மாற்றிப் பேசியது பற்றியும் பகிர்ந்துள்ளார். அதாவது விடுதலை படத்தையும் கருடன் படத்தையும் வெற்றிமாறன் தான் இயக்கியிருப்பார்.
அவர் சூரியிடம் தொடர்ந்து கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் வருடத்திற்கு ஒரு படம் காமெடி நடிகராகவும் ஒரு படம் கதாநாயகனாகவும் நடிக்குமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் கருடன் படம் வெளியான பிறகு வாய்ப்பில்லை சூரி. இனி உங்களுக்கு காமெடி நடிகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறிவிட்டாராம். இதனை சூரி பகிர்ந்து உள்ளார்.