நயன்தாரா படம்… பப்ளிசிட்டிக்கு மட்டும் ஒன்றரை கோடி செலவு…. “எல்லாம் போச்சு” ஆதங்கத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்….!! - cinefeeds
Connect with us

CINEMA

நயன்தாரா படம்… பப்ளிசிட்டிக்கு மட்டும் ஒன்றரை கோடி செலவு…. “எல்லாம் போச்சு” ஆதங்கத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்….!!

Published

on

தமிழ் திரையுலகின் லேடிஸ் சூப்பர் ஸ்டாரான நயன்தாரா அவர்கள் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறம். இந்த படத்தை கோபி நயினார் என்ற இயக்குனர் தான் எழுதி இயக்கி இருந்தார்.

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை காப்பாற்றுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 27 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

Advertisement

 

இதனால் இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் பண்ணுவதற்கு தயாரிப்பாளர் ரவீந்திரன் முடிவு செய்தார். நயன்தாராவும் நிச்சயமாக வெற்றி படமாக அமையும் என கூறியுள்ளார். இதனால் படத்திற்கு பப்ளிசிட்டி வேண்டும் என்று 75 இடத்தில் நயன்தாராவிற்கு பேனர் வைத்துள்ளனர்.

Advertisement

ஆனால் தெலுங்கில் அறம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மிகப்பெரிய தோல்வியை தான் சந்தித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரன் பேட்டி ஒன்றில் கூறும் போது படம் வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைத்தோம்.

படத்தின் பப்ளிசிட்டிக்காக மட்டுமே ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் அது கூட நஷ்டப்பட்டு போனதாகவும் தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement