CINEMA
நான் யாருக்கும் போட்டி இல்ல…. அது வெறும் செய்தி…. மைக் மோகன் பகிர்ந்த தகவல்….!!
தமிழ் திரையுலகில் 80 90 கால கட்டங்களில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் மோகன். இவரது படங்கள் மற்றும் பாடல்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில படங்களில் இவர் பாடல் பாடுவது போன்ற காட்சிகள் அமைந்திருந்ததால் மோகன் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார்.
ரஜினி கமல் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவர் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றி படங்களாகவும் அமைந்தத. இதனால் அந்த சமயத்தில் ரஜினி கமலுக்கே மோகன் போட்டியாக இருப்பார் என்று செய்திகள் வெளியானது.
அதன் பிறகு சில காலங்கள் நடிப்பதில் இருந்து விலகிய மோகன் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மோகன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டியில் அந்த காலத்தில் ரஜினி கமலுக்கு நீங்கள் போட்டியாக இருந்ததாக செய்தி வெளியானதே என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மோகன் “அது வெறும் செய்தி தான். நான் யாருக்கும் போட்டி இல்லை. நான் திரையுலகிக்குள் வரும் போது அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள். ரஜினி கமல் நடித்த படங்களை பார்த்து வளர்ந்தவன் நான்” என கூறியுள்ளார்.