“ஏய் என்ன…. என்ன வேற மாதிரி” வருமானவரித் துறையினரை அதட்டிய விஜயகாந்த்…. இதுதான் காரணம்….!! - cinefeeds
Connect with us

CINEMA

“ஏய் என்ன…. என்ன வேற மாதிரி” வருமானவரித் துறையினரை அதட்டிய விஜயகாந்த்…. இதுதான் காரணம்….!!

Published

on

தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து புரட்சி கலைஞராக மக்கள் மத்தியில் வாழ்ந்து கொடை வள்ளலாக எத்தனையோ பேருக்கு பசியாற்றி மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

இவர் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார் எத்தனையோ பேருக்கு ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். ஆனால் விஜயகாந்த் எந்த படத்தில் நடிக்க வேண்டும் எந்த கதையை தேர்வு செய்ய வேண்டும் எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்பதை அவரது சிறு வயது நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் தான் முடிவு செய்வாராம்.

Advertisement

இதனால் விஜயகாந்திடம் எவ்வளவு சொத்து இருக்கிறது எவ்வளவு சம்பளம் அவருக்கு கிடைக்கிறது அவரிடம் என்ன இருக்கிறது என்பது பற்றி கூட விஜயகாந்திற்கு முழுதாக தெரியாதாம். அனைத்தையும் கவனித்துக் கொண்டது ராவுத்தர் தான். ஒரு முறை வருமானவரித்துறையினர் விஜயகாந்த்திடம் அவரது சொத்து மதிப்பு குறித்து எல்லாம் கேள்வி கேட்டுள்ளனர்.

அவர்கள் கேட்ட அனைத்து கேள்விக்குமே விஜயகாந்த் தெரியாது என்றுதான் பதில் கூறியுள்ளார். உண்மையில் தனக்கு தெரியாது என்று விஜயகாந்த் கூறியதை வருமானவரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு மிஸ்டர் விஜயகாந்த் உண்மையை சொல்லவில்லை என்றால் வேறு மாதிரி நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.

Advertisement

உடனே கோபப்பட்ட விஜயகாந்த் “ஏய் என்ன.. என்ன வேற மாதிரி..” என எடுத்தெறிந்து பேசியுள்ளார். அதிகாரிகளும் என்ன இவர் இப்படி பேசுகிறாரே என்று யோசித்துள்ளனர். ஆனால் பிறகு தான் அவர்களுக்கு தெரிந்துள்ளது உண்மையில் விஜயகாந்திற்கு எதுவுமே தெரியாது அனைத்தையும் பார்த்துக்கொண்டது ராவுத்தர் தான் என்பது.

அதன் பிறகு அதிகாரிகள் விஜய்காந்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இப்படி தன்னிடம் இருக்கிறதோ இல்லையோ எதைப் பற்றியும் கவலைப்படாத ஒருவர்தான் நமது கேப்டன் விஜயகாந்த்.

Advertisement
Continue Reading
Advertisement