விகடன் இல்லன்னா நான் இல்ல… உணர்ச்சிபூர்வமாக பாலா பகிர்ந்த தகவல்…!! - cinefeeds
Connect with us

CINEMA

விகடன் இல்லன்னா நான் இல்ல… உணர்ச்சிபூர்வமாக பாலா பகிர்ந்த தகவல்…!!

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் முக்கியமானவர் பாலா. இவரது முதல் திரைப்படம் சேது. விக்ரம் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் கதையையும் இயக்குனர் பாலா அவர்கள் தான் எழுதியிருப்பார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் அணுகிய நபர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டனர். இறுதியாக விக்ரம் தான் இந்த படத்திற்கு சரியான கதாநாயகனாக அமைந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகி சுமார் 100 நாட்கள் வரை பிரிவியூ தியேட்டரில் மட்டும் தான் ஓடியதாம்.

Advertisement

அதன் பிறகு எவ்வளவோ முயற்சி செய்து படத்தை தியேட்டரில் வெளியிட்டுள்ளனர். படம் வெளியாகி முதல் விமர்சனம் விகடன் தான் செய்துள்ளது. இது குறித்து பாலா நிகழ்ச்சி ஒன்றில் கூறிய போது, “சேது திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டது விகடன் தான்.

அதன் பிறகு தான் படத்தின் ரிசல்ட் தலைகீழாக மாறியது. மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அன்று விகடன் இல்லையென்றால் இன்று நான் இல்லை எனவே விகடனுக்கும் எனக்கும் உணர்ச்சி பூர்வமாக ஒரு பந்தம் இருக்கிறது” என கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement