பிடிக்காத படத்தில் நடித்த கார்த்திக்…. புலம்பலை கண்டுகொள்ளாத இயக்குனர்…. இறுதியில் நடந்த அதிசயம்….!! - cinefeeds
Connect with us

CINEMA

பிடிக்காத படத்தில் நடித்த கார்த்திக்…. புலம்பலை கண்டுகொள்ளாத இயக்குனர்…. இறுதியில் நடந்த அதிசயம்….!!

Published

on

தமிழ் திரையுலகில் 1981 ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் கார்த்திக். பழங்கால நடிகர் முத்துராமனின் மகனாக இருந்தாலும் கார்த்திக்கு கிடைத்த வாய்ப்பு தானாக அமைந்தது.

அந்த படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நினைவெல்லாம் நித்தியா, அதிசய பிறவிகள், விஸ்வநாதன் வேலை வேண்டும், அவள் சுமங்கலி தான் என பல படங்களில் நடித்தார். அப்படி கார்த்திக் 1995 ஆம் ஆண்டு நடித்த படம் தான் நந்தவன தேரு. ஆனால் இந்த படம் கார்த்திக்கிற்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

Advertisement

அதன் பிறகு உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக் 1998 ஆம் வருடம் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடித்தார். ஆனால் இந்த படத்தின் கதை கார்த்திக்கிற்கு தோல்வி படமாக அமைந்த நந்தவனத் தேரு கதையோடு ஒத்துப் போய் உள்ளது.

இதனால் கார்த்திக்கிற்கு இந்த படத்தில் நடிப்பதற்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனாலும் படத்தின் இயக்குனரான விக்ரமன் கார்த்திக்கை சம்மதிக்க வைத்து நடிக்க செய்துள்ளார்.

Advertisement

படப்பிடிப்பின் போது தன்னுடன் நடித்த ரமேஷ் கண்ணாவிடம் கார்த்திக் பிடிக்காத படத்தில் தன்னை நடிக்க வைக்கிறீர்களே என்று புலம்பிக்கொண்டே இருப்பாராம்.

இப்படி கார்த்திக் விருப்பமே இல்லாமல் நடித்த அந்தப் படம் 250 நாட்கள் தியேட்டரில் ஓடி கார்த்திக்குக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனை ரமேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement