CINEMA
தோல்வியால் நிறைவேறாத ஆசை…. ஒரே நடனத்தில் குவிந்த ரசிகர்கள்…. திறமையால் சாதித்த சாய் பல்லவி….!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. 2005 ஆம் ஆண்டு வெளியான கஸ்தூரிமான் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாய் பல்லவி அறிமுகமானார். அதன் பிறகு தாம் தூம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பார்.
சிறு வயது முதலே நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் பிரபுதேவாவை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அவரால் இறுதி சுற்று வரை செல்ல முடியாமல் போனது.
ஆனால் அவரது நடனத் திறமையை பார்த்த அல்போன்ஸ் புத்ரன் 2015 ஆம் ஆண்டு பிரேமம் படத்தில் சாய் பல்லவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்த படம் சாய்பல்லவிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரசிகர்கள் பலரும் மலர் டீச்சர் போன்று கல்லூரியில் டீச்சர் கிடைக்க மாட்டார்களா என்று எங்கும் அளவிற்கு சாய் பல்லவி நடித்து அசத்தியிருப்பார்.
அதன் பிறகு தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். 2018 ஆம் ஆண்டு சாய் பல்லவி தனுஷுடன் இணைந்து மாறி 2 திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமானது என்று கூறலாம்.
அதற்கு காரணம் அந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து ஆடிய நடனம் தான். யாரைப் பார்ப்பதற்காக சாய் பல்லவி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்று தோல்வியை சந்தித்தாரோ அதே பிரபுதேவா தான் ரவுடி பேபி பாடலுக்கு நடந்த இயக்குனராக இருந்திருப்பார்.
இந்த பாடலைத் தொடர்ந்து சாய் பல்லவிக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது என்று கூறலாம். அடிமட்டத்தில் தொடங்கி தனது நடனத் திறமையால் கதாநாயகியாக மாறி அபரிவிதமான நடிப்பால் தற்போது பிரபல கதாநாயகியாக மாறி இருக்கிறார் சாய் பல்லவி.