தந்தையின் நிழலில் இருந்து வெளியேறும் ஜூனைத் கான்…!சாய் பல்லவி ஜோடியாக நடித்தும் முதல் படம் தோல்வி…!ஆமிர் கானுக்கு நோ சொல்லிவிட்டு ஜூனைத் கான் போட்ட புதிய பிளான்…! – cinefeeds
Connect with us

CINEMA

தந்தையின் நிழலில் இருந்து வெளியேறும் ஜூனைத் கான்…!சாய் பல்லவி ஜோடியாக நடித்தும் முதல் படம் தோல்வி…!ஆமிர் கானுக்கு நோ சொல்லிவிட்டு ஜூனைத் கான் போட்ட புதிய பிளான்…!

Published

on

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஆமிர் கானின் மகன் ஆமிர் கான், தமிழ்நாட்டின் முன்னணி நடிகை சாய் பல்லவியுடன் இணைந்து நடித்த ‘ஏக் தின்’ (Ek Din) திரைப்படம் கடந்த மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகப் படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே இமாலய எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், வெளியான பிறகு இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது. பாலிவுட்டில் தற்போது இந்தத் தோல்விதான் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இதுகுறித்து ஜூனைத் கான் மிகவும் முதிர்ச்சியோடு வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அறிமுகப் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்த ஜூனைத் கான், “இப்படம் ரசிகர்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தே இந்தப் படத்தை உருவாக்கினோம்; எனக்கும் அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு படம் திரையரங்கில் கனெக்ட் ஆகவில்லை என்று நினைக்கிறேன். சினிமாவில் சில நேரங்களில் இப்படிச் சம்பவிப்பது மிகவும் சகஜமான ஒன்றுதான்” என்று மிகவும் எதார்த்தமாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து தனது தந்தை ஆமிர் கான் குறித்துப் பேசிய அவர், “அப்பா ஒரு விஷயத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர். படம் ஓடவில்லை என்றால் அவருக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவர் அதிலேயே தேங்கி நின்றுவிடாமல், உடனே அடுத்த வேலையை நோக்கித் நகர்ந்துச் சென்றுவிடுவார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “எனது தந்தையின் ஆமிர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மட்டுமே தொடர்ந்து நடிக்க நான் விரும்பவில்லை. ஒரு தரமான படம் உருவாக பல வருடங்கள் ஆகும். ஆனால் நான் இப்போதுதான் வளர்ந்து வரும் நடிகன், எனக்குத் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டிய தேவை இருக்கிறது” என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.

ஆமிர் கானின் வாரிசாக இருந்தாலும், முதல் படத்தின் தோல்வியை நேருக்கு நேர் எதிர்கொண்டு, சினிமா வர்த்தகத்தைப் புரிந்து கொண்டு ஜூனைத் கான் பேசியுள்ள இந்த முதிர்ச்சியான பேட்டி பாலிவுட் வட்டாரங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. தந்தையின் நிழலில் இருந்து வெளிவந்து, சுய உழைப்பால் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற அவரது இந்தத் துணிச்சலான முடிவு, சமூக வலைதளங்களில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in