CINEMA
அப்போ எனக்கு 17 வயசு… நகுல் ரொம்ப தொந்தரவு பண்ணினார்…. சுனைனா பகிர்ந்த தகவல்….!!
திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்த இவர் 2008 ஆம் ஆண்டு பிவி பிரசாத் இயக்கத்தில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
நகுல் கதாநாயகனாக நடித்து வித்தியாசமான கதை அம்சத்துடன் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது சுனைனாவிற்கும் முதல் படத்திலிருந்து தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மாசிலாமணி திரைப்படத்தில் நகுலுடன் இணைந்து சுனைனா நடித்திருப்பார்.
இந்நிலையில் இவ்விரண்டு படங்களிலும் நகுலுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சுனைனா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். “படப்பிடிப்பு தளத்தில் நான் யாரிடமும் பேசவில்லை. அந்த சமயத்தில் 16 17 வயது என்பதால் பேசுவதற்கு தயக்கம் இருந்தது.
அப்போது திரைத்துறையும் எனக்கு புதியது. ஆனால் நகுல் பேசுங்கள் பேசுங்கள் என்று தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார். எப்படியாவது என்னை பேச வைக்க வேண்டும் என்று நகுல் கடுமையாக முயற்சி செய்தார்” என்று சுனைனா பகிர்ந்துள்ளார்.