CINEMA
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமன்னா…. யார் மீது தெரியுமா…? பரபரப்பு தகவல்…!!
நடிகை தமன்னா விளம்பரம் ஒளிபரப்பும் விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது அந்த வழக்கில் நகைகளை வாங்கி விற்கும் குறிப்பிட்ட அந்த நிறுவனம் ஒன்று ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தன்னுடைய விளம்பரங்களை பயன்படுத்தி வருவதாக நடிகை தமன்னா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து தகுந்த பதில் அளிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.